Wednesday, January 4, 2012
Saturday, November 19, 2011
வழியனுப்ப வந்தாள் யாழினி
எங்க போறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?
விளக்கிக் கொண்டிருந்தேன்.
எங்கபோறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?
அங்கபாரு குருவி சத்தம் கேட்குதா?
அண்ணாந்து பார்த்தாள்
இலைகளால் வசியம் செய்யும்
நிமிர்ந்த அரச மரம்
ஐ... மாமா... குருவிச்சத்தம்!
அது கிளிக்க சத்தம்.
கிளி எப்படி சத்தம்போடும்?
கீ..கீ..ண்ணு சத்தம்போடும்.
கிளி எப்படி சத்தம் போடும்?
கிளி இருக்குல்லா... கிளி இருக்குல்லா....
அதுஉ கீ.. கீ...ண்ணு சத்தம்போடும்.
எப்படி சத்தம்போடும் சொல்லு..
கீ... கீ...ண்ணு சத்தம்போடும
சத்தமா சொல்லு பாப்போம்.
கீ... கீ....
கிளியின் சிரிப்பில் பேருந்துகள் அசைந்தன
அவள் சத்தத்தை அவளே நம்பாமல்
கட்டிப்பிடித்துக் கொண்டாள்
உயிர்கூட்டுக்குள் ஈரத்தென்றல்
பயணிகளின் பார்வையில்
நானும் யாழினியும்
யாழினியின் அப்பாவும்
முகங்களில் குதிக்கும் முயல்குட்டியின் வசியத்தில்
மயங்கின சில பேருந்துகள்.
மாமாவுக்கு டாட்டா சொல்லு!
டாட்டா....!
டாட்டா.....!
அப்பா, மாமா எங்க போறாங்க...?
................ இரா. அரிகரசுதன், 20.11.2011,1.00 am
வேலைக்கு.
எதுக்கு?
விளக்கிக் கொண்டிருந்தேன்.
எங்கபோறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?
அங்கபாரு குருவி சத்தம் கேட்குதா?
அண்ணாந்து பார்த்தாள்
இலைகளால் வசியம் செய்யும்
நிமிர்ந்த அரச மரம்
ஐ... மாமா... குருவிச்சத்தம்!
அது கிளிக்க சத்தம்.
கிளி எப்படி சத்தம்போடும்?
கீ..கீ..ண்ணு சத்தம்போடும்.
கிளி எப்படி சத்தம் போடும்?
கிளி இருக்குல்லா... கிளி இருக்குல்லா....
அதுஉ கீ.. கீ...ண்ணு சத்தம்போடும்.
எப்படி சத்தம்போடும் சொல்லு..
கீ... கீ...ண்ணு சத்தம்போடும
சத்தமா சொல்லு பாப்போம்.
கீ... கீ....
கிளியின் சிரிப்பில் பேருந்துகள் அசைந்தன
அவள் சத்தத்தை அவளே நம்பாமல்
கட்டிப்பிடித்துக் கொண்டாள்
உயிர்கூட்டுக்குள் ஈரத்தென்றல்
பயணிகளின் பார்வையில்
நானும் யாழினியும்
யாழினியின் அப்பாவும்
முகங்களில் குதிக்கும் முயல்குட்டியின் வசியத்தில்
மயங்கின சில பேருந்துகள்.
மாமாவுக்கு டாட்டா சொல்லு!
டாட்டா....!
டாட்டா.....!
அப்பா, மாமா எங்க போறாங்க...?
................ இரா. அரிகரசுதன், 20.11.2011,1.00 am
Friday, September 16, 2011
கூடங்குளம் உண்ணாவிரதப் போராட்டம்
எம் மக்கள் அங்கே
மயங்கி விழுந்து கொண்டிருக்கையில்
பொய்யை மலை மலையாய் வாரி இறைத்துக் கொண்டிருக்கும்
அணுசக்தி விஞ்ஞானிகளே அதிகாரிகளே உங்கள் இதயங்கள் என்ன
இரும்பால் ஆனாதா?
எம் கவிஞர்களின் வாயால் அறப்பாட்டு
வீசி எறியப்பட்டால் இந்த உலகமே தாங்காது?
வேண்டாம் என் அன்பு விஞ்ஞானிகளே
உங்கள் இதயத்தை கொஞ்சம் திறந்து வையுங்கள்
நீங்கள் உங்கள் மனைவியருடனும் காதலியருடனும்
களித்து பிறந்த பிறக்கப்போகிற
உம் குழந்தைகளுக்காகவும்தான்
போராடிக்கொண்டிருக்கிறோம் நாங்கள் என்பதை
ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் பரிசோதனைகளை
பரிசோதித்து எங்களை மண்ணழித்துவிடாதீர்கள்
உங்கள் மௌனங்களை சற்று கலைத்து
சொல்லுங்கள்
நீங்கள் சொன்னால் யாரும் கேட்பர்
ஏனென்றால் நீங்கள் விஞ்ஞானிகள்
உண்மையையைச் சொல்லுங்கள்
நீங்கள் நம்புகின்ற இறைவனுக்காகவாவது
அல்லது நீங்கள் விரும்புகின்ற அறிவியலுக்காகவாவது
உண்மையாயிருங்கள்
இருபதாயிரவருட கதிர்வீச்சு
ஆபத்து அங்கே உறங்கிக்கிடக்கின்றது
என்கின்ற உண்மையை
மனிதனுக்காக மட்டுமல்ல
அனைத்து உயிர்களுக்கவும்
இந்த உலகிற்காகவும் எடுத்துச் சொல்லுங்கள்
சவால் விட்டுச் சொல்லுங்கள்
மின்சாரம்தானே
நாங்கள் சூரியனை பிழிந்து
தருகிறோம் என்று உரக்க கூறுங்கள்
பணம் என்ன பணம்
எம் மக்கள் உயிர்தான் அரிது
என்று அவர்கள் காதுகளில் விழும்படி
சொல்லுங்கள்
சொல்லிவிட்டு வாருங்கள்
இதோ எம்மக்கள் இருக்கும்
உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே
அல்ல எம் மக்களின் இதயத்திற்கு உள்ளே
உங்களுக்கு கோவில் கட்டி தருகிறோம்.
வருவீர்களா..? வருவீர்களா..?
----
இரா. அரிகரசுதன், 17.09.2011
Friday, September 2, 2011
சாட்சி சொல்லிகளின் காலம்
மணித்துளிகளின்
சங்கிலி வட்டத்தில்
எல்லாப் புள்ளிகளும்
வெளிச்சத்தில் தொங்க வேண்டுமாம்
மின்சாரத் தேவையின் தீர்வுப்புள்ளியை
வன்புணர்ந்து
கோடுபோடுகிறது
அணுசக்தி
நிலம் நீர் காற்று உயிர் என
எல்லாமும் எரிந்து
எழும்பும் புகைமண்டி
நாறும்போது
கிழிந்து தொங்கும் வெளிச்சம்
பற்றிய உண்மையை
யார் சாட்சி சொல்வது?
---
இரா. அரிகரசுதன்
சங்கிலி வட்டத்தில்
எல்லாப் புள்ளிகளும்
வெளிச்சத்தில் தொங்க வேண்டுமாம்
மின்சாரத் தேவையின் தீர்வுப்புள்ளியை
வன்புணர்ந்து
கோடுபோடுகிறது
அணுசக்தி
நிலம் நீர் காற்று உயிர் என
எல்லாமும் எரிந்து
எழும்பும் புகைமண்டி
நாறும்போது
கிழிந்து தொங்கும் வெளிச்சம்
பற்றிய உண்மையை
யார் சாட்சி சொல்வது?
---
இரா. அரிகரசுதன்
அணுஉலை = எதிர்காலத்தின் கல்லறை
கைத்தறிகள் கதவுகளாகி
ஓடிக்கொண்டிருக்கும்
ஓடத்தின் இசையில்
கைகளும் கால்களும்
கனத்து வெடிக்கட்டும்
தைத்து கிழிக்கப்பட்டு
தெரியும் வெளியில்
கூவி விற்கும் பெட்டிகளின்றி
நடுவீட்டுக்குள்
பதுங்கிக் கிடக்கட்டும்
வெறுமை
பச்சை வயல்களின்
கல்லறைகளாய் எழும்பி நிற்கும்
காளையும் கரடியும்
உடைந்து சிதறட்டும்
தாளா வெக்கை
உடலெங்கும்
கண்களாய் முளைக்கட்டும்
இருட்டு பெரும்காடாகி
குரல்வளைகளை
நெருக்கி உடைக்கட்டும்
ஏனெனில்
கல்லறை விளக்குக்கு
கரண்டு தேவையில்லை
-----
இரா. அரிகரசுதன்
ஓடிக்கொண்டிருக்கும்
ஓடத்தின் இசையில்
கைகளும் கால்களும்
கனத்து வெடிக்கட்டும்
தைத்து கிழிக்கப்பட்டு
தெரியும் வெளியில்
கூவி விற்கும் பெட்டிகளின்றி
நடுவீட்டுக்குள்
பதுங்கிக் கிடக்கட்டும்
வெறுமை
பச்சை வயல்களின்
கல்லறைகளாய் எழும்பி நிற்கும்
காளையும் கரடியும்
உடைந்து சிதறட்டும்
தாளா வெக்கை
உடலெங்கும்
கண்களாய் முளைக்கட்டும்
இருட்டு பெரும்காடாகி
குரல்வளைகளை
நெருக்கி உடைக்கட்டும்
ஏனெனில்
கல்லறை விளக்குக்கு
கரண்டு தேவையில்லை
-----
இரா. அரிகரசுதன்
Friday, July 29, 2011
கதையின் நதி ஓடத்தை அடித்து சென்றது
ஆழ்பசை
நிறம் பரப்பி நின்றிருந்த
வாதுமை மரத்தினடியில்
மொழுக்கு கல்லில்
அவனின் காதல் பற்றிய
வெப்பம் திமிறிய கதைகளை
எட்டு கால் பாய்ச்சலில்
சொல்லிக் கொண்டிருந்தான்
கதையிலிருந்து எழுந்து வந்த நதி
இழுத்து சென்ற ஓடத்தில்
கையசைத்திருந்தவளின் பிம்பம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு வெறித்துக்கொண்டிருந்தது
இரா. அரிகரசுதன், 27.07.2011
நிறம் பரப்பி நின்றிருந்த
வாதுமை மரத்தினடியில்
மொழுக்கு கல்லில்
அவனின் காதல் பற்றிய
வெப்பம் திமிறிய கதைகளை
எட்டு கால் பாய்ச்சலில்
சொல்லிக் கொண்டிருந்தான்
கதையிலிருந்து எழுந்து வந்த நதி
இழுத்து சென்ற ஓடத்தில்
கையசைத்திருந்தவளின் பிம்பம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு வெறித்துக்கொண்டிருந்தது
இரா. அரிகரசுதன், 27.07.2011
Tuesday, June 28, 2011
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இலக்கியம் இருட்டடிப்பு - கண்டணம் முழக்குவோம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
பத்திரிகைச்செய்தி:24.06.2011
by Tamil Selvan on Saturday, June 25, 2011 at 9:56pm
குறிப்பாக பாவேந்தர் பாரதிதாசனின் ஆத்திச்சூடி ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. கவிஞர் அப்துல் ரகுமானின் நவீன கவிதை ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.திராவிட இயக்க முன்னோடிக் கவிஞராக மதிக்கப்படும் பாவேந்தரின் பாட்டுக்கே இந்தக்கதியா என்று எழுத்தாளர்கள் பெரும் மனக்கொதிப்படைந்துள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமானின் ” வேலிகளுக்கு வெளியே நீளும் கிளைகளை வெட்டலாம். ஆனால் பூமிக்குக் கீழே நீளும் வேர்களை என்ன செய்வீர்கள்?” என்கிற கவிதை புதுக்கவிதை பிறந்த காலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற கவிதையாகும். அதில் என்ன கட்சி அரசியல் இருக்கிறது?
பாவேந்தரின் ஆத்திசூடியில் எந்தக் கட்சிப் பிரச்சாரமும் இல்லையே? அதே போல அறிவியல் பாடத்தில் சட்ட காந்தப் படம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தைப்பொங்கல் பற்றிய பாடல் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளைத் தமிழர் திருநாளாகத்தான் காலம் காலமாகத் தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். திமுக அரசு சட்டம் கொண்டு வந்ததால் அல்ல. தமிழ் மக்களின் பண்பாட்டு உணர்வை காகிதத்தால் ஒட்டி மறைக்க முடியுமா? இவையெல்லாம் ஏன் ஒட்டப்படுகின்றன என்கிற விளக்கத்தை மக்களுக்குத் தர வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.
இந்த மறைப்புகளுக்குப் பின்னணியாக ஒரு பழமைவாதக்கண்ணோட்டமும் சகிப்புத்தன்மையற்ற மனமுமே தொழிற்படுவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கருதுகிறது.இப்போக்கை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.இது வெறும் அரசியல் காழ்ப்புணர்வுப் பிரச்னை அல்ல.கல்வித்தளத்தில் ஒரு தத்துவார்த்தப் போர் துவங்கியிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.தமிழரின் தத்துவ மரபைக் காக்கும் போராட்ட்த்தில் அனைத்துப்பகுதிப் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் ஒன்றுபட்டு இறங்க வேண்டும்.
எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது கை வைக்கும் போக்கை சகல பகுதி எழுத்தாளர்களும் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமுஎகச அறைகூவி அழைக்கிறது.
எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது கை வைக்கும் போக்கை சகல பகுதி எழுத்தாளர்களும் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமுஎகச அறைகூவி அழைக்கிறது.
அருணன்/மாநிலத்தலைவர்
ச.தமிழ்ச்செல்வன்/ மாநிலப்பொதுச்செயலாளர்
மேற்கண்ட அறிக்கையை தங்கள் தொலைக்காட்சியில் /இதழில் வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Tuesday, June 21, 2011
நினைவோடை
தளை நார் கொண்டு
தென்னை மரத்தில் கட்டிப்
போடப்பட்டிருந்த அந்த
குட்டியானை என் முகத்தை
தொட்ட வேளையில்
தும்பிக்கையிலிருந்து
வழிந்த எச்சிலின் மணம்
காலையில் முத்தம் கொடுத்து
வந்த பச்சக் குழந்தையின்
உடல் மணத்த தாய்ப்பாலாய்
உயிர் சிலிர்க்க கண் பணித்த
திரையில் நகர்ந்துகொண்டிருந்தது
அம்மாவைப் பற்றிய ஞெகிழ்வு
--- இரா. அரிகரசுதன், 21.06.2011Thursday, June 9, 2011
ஒழுகும் நதி
புயல் காற்று இழுத்துச்செல்லும்
ஒற்றைப் படகு
தலை சுற்றித் திரியும்
அந்தத் திசையில்
அந்தத் திசையில்
கிளை பரப்பி வளர்ந்திருக்கும்
ஒரு கொடுங்கத்தி மரமென
சரிந்துக் கிடக்கின்ற நீ
உறைந்த நினைவுகளுக்குள்
உறைந்த நினைவுகளுக்குள்
ஒழுகும் நதியாய்
நீந்திக் கொண்டிருக்கிறாய்!
-------இரா. அரிகரசுதன், 09 .06 .2011
-------இரா. அரிகரசுதன், 09 .06 .2011
Saturday, May 21, 2011
Subscribe to:
Posts (Atom)




